சத்துணவுப் பணியாளரிடம் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தங்கச்சங்கிலியைப் பறித்துசென்றனர்.
திருவாடனை தாலுகா ஊருணிக்கோட்டை அருகே உள்ள பணங்குளத்தில் சத்துணவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் பானுமதி (45). இவர் தினமும் ஊருணிக்கோட்டையில் இறங்கி பணங்குளத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு மையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை பேருந்தில் செல்ல பணங்குளத்தில் இருந்து ஊருணிக்கோட்டைக்கு வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பானுமதி அணிந்திருந்த ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருவாடனை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.