முதுகுளத்தூர் அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்திக்கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே மருதகத்தைச் சேர்ந்தவர் மயில்வாசகம். இவரது மனைவி மங்களேஸ்வரி(30). வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த திருச்சங்கு(28) மதுபோதையில், மங்களேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை மங்களேஸ்வரி கண்டிக்கவே, ஆத்திமடைந்த திருச்சங்கு தன்னிடம் இருந்த கத்தியால், அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மங்களேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தேரிருவேலி போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருச்சங்குவை கைது செய்தனர்.