முதுகுளத்தூர், செப். 23: ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் சிக்கல் பகிர் அலி தலைமையிலான ஐவர் குழு கொண்ட மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூர் வாவா ராவுத்தர், சல்மான் ரபீக், பரமக்குடி எம்.எம். முகம்மது, சாயல்குடி முகம்மது அலி புட்டோ ஆகியோரும், தேர்தல் அலுவலராக எம்.எம். ஜியாவுதினும் நியமிக்கப்பட்டுள்ளனர்.