சுடச்சுட

  

  மிளகாய் பயிரில் பூக்கள் உதிர்வதைத் தடுக்க பிளானோபிக்ஸ்

  By பரமக்குடி  |   Published on : 01st February 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் சாகுபடியில் பூக்கும் பருவத்தில் பூ மொட்டுகளும், பூக்களும் உதிர்வதை தடுக்க பிளானோபிக்ஸ் எனப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்த வேண்டும் என தோட்டக் கலை உதவி இயக்குநர் எஸ். ஆறுமுகம் புதன்கிழமை தெரிவித்தார்.

   இதுகுறித்து அவர் கூறியது: நயினார்கோவில் ஒன்றியத்தில் இந்த ஆண்டு 1,550 ஹெக்டர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் பயிர் பூக்கும் பருவத்தில் உள்ளது.

    இந்த சமயத்தில் பூ மொட்டுகளும், பூக்களும் சில இடங்களில் பிஞ்சுகளும் உதிர்வதால் மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

   இதனைத் தவிர்க்க பயிர் முளைத்த 90 மற்றும் 120-ஆம் நாள்களில் பிளானோபிக்ஸ் எனப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து கைத் தெளிப்பான் மூலம் மாலை வேலையில் தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருத்தல் கூடாது.

    இந்த மருந்தை தெளிக்கும்போது நிலம் போதுமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.

   இவ்வாறு பயிர் வளர்ச்சி ஊக்கி தெளிப்பதன் மூலம் பூ, பிஞ்சு உதிர்வதைக் கட்டுப்படுத்துவதோடு, அதிக அளவு பூக்கள் உருவாக வழி ஏற்படும். மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிருக்கு பிளானோபிக்ஸ் தெளித்து அதிக மகசூல் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai