Enable Javscript for better performance
 வாக்குச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கமுதி தாலுகாவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் பார்வையாளர் புதன்கிழமை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

       ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கமுதி தாலுகாவில் உள்ள பேரையூர்,  கமுதி, அகத்தாரிருப்பு, அபிராமம் ஆகிய ஊர்களில் தலா 2 வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

         நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்குபதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் பார்வையாளர் சந்தோஷ்குமார் கேட்டுக்கொண்டார்.

    மேலும் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அலுவலர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

    பார்வையாளருடன் வட்டாட்சியர் சி.இந்திர வள்ளி, தேர்தல் பிரிவு தனித் துணை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai