Enable Javscript for better performance
ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூர் அருகே மிளகாய் தோட்டத்தில் மேய்ந்த 14 ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக, தோட்ட உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

     முதுகுளத்தூர் அருகே இ.நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டி.  மிளகாய் தோட்டம் வைத்துள்ளார். இவரது தோட்டத்தில் தினந்தோறும் ஆடுகள் மேய்ந்து விட்டு சென்றதாம்.  இதனால் பாண்டி தோட்டத்தில் தண்ணீருடன் பூச்சி மருந்தை கலந்து வைத்ததாகக் கூறப்படுகிறது. தோட்டத்துக்கு வழக்கம் போல் வந்த ஆடுகள் வாளிகளில் இருந்த தண்ணீரை குடித்தன. இதில் 14 ஆடுகளும் தோட்டத்திலேயே உயிரிழந்தன.

     இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai