Enable Javscript for better performance
ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயில் திருவிழா துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்புல்லாணி பத்மாஸனித்தாயார் சமேத ஸ்ரீஆதிஜெகன்னாதப் பெருமாள் திருக்கோயிலில் பங்குனித் திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

             விழாவினைத் தொடர்ந்து தினசரி சுவாமி காலை,மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி திருவீதியுலா வரவுள்ளனர். ஏப்ரல் 8ஆம் தேதி கருடசேவைக் காட்சியும், 10ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

    ஏப்ரல் 13ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் வி.மகேந்திரன் தலைமையிலான குழுவினர் செய்து வருவதாக கோயில் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai