Enable Javscript for better performance
கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் கடலில் கட்டுமரத்திலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.  

      ராமேசுவரம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகசாமி(34). மீனவர் ஆவார்.  இவர் செவ்வாய்க்கிழமை காலையில் பாசி பிடிப்பதற்காக, கட்டுமரத்தில் வடகாடு கடல் பகுதியில் சென்றுள்ளார்.

     அப்பகுதியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுமரம் நிலை தடுமாறியது. இதில் நாகசாமி கடலில் தவறி விழுந்து மூழ்கினார். சில மணி நேரம் கழித்து அவ்வழியாக படகில் சென்ற மீனவர்கள், கடலில் கட்டுமரம் மட்டும் தனியாக நிற்பதை கண்டு சந்தேகத்தின் பேரில் அருகில் சென்று பார்த்தனர்.

    அப்போது கட்டுமரத்துக்கு அருகில் நாகசாமியின் சடலம் மிதந்துள்ளது.

      இதையடுத்து நாகசாமியின் சடலத்தை மீட்டு  கரைக்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து மண்டபம் கடலோர பாதுகாப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai