Enable Javscript for better performance
கடும் வறட்சி: தென்னை மரங்கள் கருகும் அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    கமுதி பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால் தென்னை மரங்கள் கருகி மடியும் நிலை உருவாகி உள்ளது. 

      கமுதி பகுதியில் பருவ மழை தேவையான அளவு பெய்வதில்லை. இதனால் நிலத்தடி நீர் அதிக தேக்கமின்றி பனை, தென்னை மரங்கள் போன்றவை தேவையான தண்ணீரின்றி கருகி வருகின்றன. தென்னை மர மட்டைகள் கருகி கீழே விழுந்து விடுகின்றன.     இதனால் பல இடங்களில் தென்னை மரங்கள், மட்டைகள் இல்லாமல் மொட்டையாகவே காட்சி அளிக்கின்றன.

       எனவே வேளாண் துறையினர் தனிக்கவனம் செலுத்தி, வறட்சியால் கருகி வரும் தென்னை மரங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai