Enable Javscript for better performance
கமுதியில் தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முகம்மது ஜலீல் செவ்வாய்க்கிழமை கமுதி பகுதியில் ஆதரவு திரட்டினார்.

      கமுதி அன்னை சகாயி திரை அரங்கில் ஒன்றிய, நகர தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டமும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.முகம்மது ஜலீல் அறிமுகக் கூட்டமும், நடைபெற்றது. மாவட்ட செயலர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. தலைமையும் தொகுதி தேர்தல் பிரசார பொறுப்பாளர் எஸ்.ரகுபதி, முன்னள் அமைச்சர் வெங்கடபதி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.  ஒன்றிய பொறுப்புக்குழு தலைவர் எஸ்.கே.வி. முத்துராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலரும் பேசினர். வேட்பாளர் மும்மது ஜலீல் பேசியது:

      மக்கள் வரவேற்கும் வலிமையான கூட்டணியை தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவாக்கி உள்ளார். மத்தியில் மத சார்பற்ற ஆட்சியை அமைக்க கருணாநிதி முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் உருவாக்கியுள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணியை தமிழ்நாட்டில் மக்கள் அமோக வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும்.

      தேர்தலில் இக் கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. எனவே தி.மு.க. மற்றும் கூட்ணி கட்சியினர் கடுமையாக உழைத்து ராமநாதபுரம் மக்களவை தொகுதியில்  தி.மு.க.வை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

      அபிராமம் நகர செயலர் மு.ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.   கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்ணக்கான செயல் வீரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க. தே.மு.தி.க. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்சி விலகி தி.மு.க.வில் சேர்ந்தனர்.

      கமுதியில் பசும்பொன் தேவர், மருதுபாண்டியர், காமராஜர், அம்பேத்கர், இமானுவேல் சேகரன் ஆகியோர் சிலைகளுக்கு வேட்பாளர் முகம்மது ஜலீல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைத்து சமுதாய உறவின் முறைகளுக்குச் சென்று ஆதரவு திரட்டினார். கமுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai