Enable Javscript for better performance
திருக்குறள் போட்டி: வ.உ.சி. பள்ளி மாணவி மூன்றாமிடம்- Dinamani

சுடச்சுட

    

    உலகத் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான திறக்குறள் போட்டியில் பரமக்குடி வ.உ.சி. பள்ளி மாணவி மூன்றாமிடம் பெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவியை பள்ளியின் சார்பில் புதன்கிழமை பாராட்டி கெüரவித்தனர்.

     மதுரை திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பரமக்குடி வ.உ.சி பள்ளி மாணவர்கள் 20 பேர் கலந்துகொண்டனர். இதில் 9ஆம் வகுப்பு மாணவி பா. கீதா மீனாட்சி மூன்றாமிடம் பிடித்து தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து பரிசும், சான்றிதழும் பெற்றுள்ளார்.

       வெற்றிபெற்ற மாணவி மற்றும் பயிற்சியளித்த ஆசிரியை பி.ஷியாமளா ஆகியோரை பள்ளி முதல்வர் பி.மகாதேவன், தலைவர் டி.கார்த்திகேயன், தாளாளர் என்.  இளங்கோவன், பொருளாளர் எஸ். சுந்தரேசன், நிர்வாக அலுவலர் அ.மருது ஆகியோர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.  பள்ளி துணைமுதல்வர் க. பிரேமலதா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai