Enable Javscript for better performance
பணி நிரந்தரம் பெற்றுத்தருவதாக ரூ.2 லட்சம் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    அரசு வங்கியில் பணி நிரந்தரம் பெற்றுத்தருவதாக ரூ.2 லட்சம்  மோசடி செய்ததாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

      ராமநாதபுரம் மாவட்டம் மருதகத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(32). இவர் பரமக்குடியில் உள்ள அரசுடைமை வங்கி ஒன்றில் 2010-ஆம் ஆண்டு முதல் தாற்காலிக ஏவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது பணியை நிரந்தரமாக்கித் தருவதாக, அபிராமம் பகுதியைச் சேர்ந்த ராஜூ, தாமஸ் பாலன், முத்துராஜ் ஆகியோர், வெள்ளைச்சாமியிடம் ரூ.2 லட்சம்  வாங்கினார்களாம்.   ஆனால் பணி நிரந்தர உத்தரவு வாங்கித் தரவில்லை, பணத்தையும் திரும்பத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

     இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்பேரில் அபிராமம் போலீஸார், ராஜூ உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai