Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு: 18708 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 125 தேர்வு மையங்களில் மொத்தம் 18708 மாணவ, மாணவியர்கள் புதன்கிழமை துவங்கிய தேர்வினை எழுதினார்கள்.

         பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை துவங்கியது. முதல் நாள் தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரு கல்வி மாவட்டங்களில் பரமக்குடியில் 4136 ஆண்கள்,4076 பெண்கள் உள்பட மொத்தம் 8212 பேர் எழுதினர்.

    ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 5129 ஆண்கள், 5367 பெண்கள் உள்பட மொத்தம் 10496 பேர் தேர்வு எழுதினார்கள்.

     இரு கல்வி மாவட்டங்களையும் சேர்த்து ஆண்கள் 9265 பேர், பெண்கள் 9443 பேர் உட்பட மொத்தம் 18708 பேர் தேர்வு எழுதினார்கள்.   ராமநாதபுரத்தில் 65 தேர்வு மையங்களும், பரமக்குடியில் 60 தேர்வு மையங்களும் உள்பட மொத்தம் 125 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு மையங்களை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சிவகாம சுந்தரி தலைமையிலான பறக்கும்படைக் குழுவினர் கண்காணித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai