Enable Javscript for better performance
பாஜகவுக்கு  அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    பணி ஓய்வு பெற்ற போலீஸ் துணை கமிஷனரும், அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவருமான வா.மாணிக்கம் புதன்கிழமை ராமநாதபுரத்தில்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

      தேசத்தின் பாதுகாப்புக்காக பா.ஜ.க.வுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தான் விபத்துக்களை குறைக்க 4 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களோ, தலையீடுகளோ, குறுக்கீடுகளோ இல்லாமல் இருந்தது.

     அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கியது. இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக பொக்ரான் அணுகுண்டு சோதனையை பா.ஜ.க.நடத்தியது. எனவே தேசப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டும்.

     சுமார் 5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட எங்கள் கட்சியிடம் பா.ஜ.க. ஆதரவு தருமாறு கேட்டதையடுத்து, பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம். அராஜகம், ஊழல், வன்முறை ஒழிய மக்கள் நலத் திட்டங்கள் கடைசி மனிதனையும் சென்று சேர, பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வா.மாணிக்கம் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai