Enable Javscript for better performance
பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை யுரேகா போர்ப்ஸ் நிறுவனம் சார்பில் வளாக நேர்காணல் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் ஆர்.முருகானந்தம் தலைமை வகித்தார். துணைச் செயலர் ஏ.லோகநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.கமலநாதன் வரவேற்றார்.   யுரேகா போர்ப்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் ராஜேஸ் நிறுவனம் குறித்த அறிமுக உரையாற்றினார். இந்த நேர்முகத் தேர்வில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அனைத்துத்துறை மாணவர்களும் கலந்துகொண்டனர்.  வேலைவாய்ப்பு அலுவலர்கள் வி.விஸ்வநாதன், என்.மதுராந்தகன் ஆகியோர் ஏற்பாட்டில் 29 மாணவர்கள் அந்நிறுவனத்தின் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.  கல்லூரியின் துணை முதல்வர் பி.வீ.ரவீந்திரகுமார், எம்.குணசேகரன், துறைத்தலைவர் பி.குமார், நிர்வாக அதிகாரி எல்.செல்வமணி ஆகியோர் தேர்வு பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai