சுடச்சுட

  

  ராமேசுவரம், செப். 30: ராமேசுவரம் பகுதியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்று  கடலில் மூழ்கிய படகை, மீனவர்கள் மீட்டு  சீரமைப்பு பணிக்காக கரைக்கு கொண்டு வந்தனர்.

   ராமேசுவரம்  துறைமுக பகுதியிலிருந்து கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி  தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த பவியான் என்பவரின்  படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். 

  அப்போது கடல் சீற்றத்தால் அலையில் சிக்கி படகு கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய  படகை மீட்க உரிமையாளருக்கு, மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் அனுமதி அளித்தார். இதையடுத்து செப்.25இல் 6 படகுகளில் 40 மீனவர்கள்  மீட்பு பணிக்குச் சென்றனர்.

  சம்பவ இடத்தில் முகாமிட்ட மீனவர்கள், மூழ்கியிருந்த படகை மீட்டு ராமேசுவரம் துறைமுக பகுதிக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகில் என்ஜின், மீன்பிடி ரோலர், மீன்பிடி வலைகள் உள்பட அனைத்து பொருள்களும் சேதமடைந்து விட்டதால்  ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டிருப்பதாக படகின் உரிமையாளர் பவியான் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai