சுடச்சுட

  

  குடிநீர் குழாயில் கழிவு நீர் கலப்பு: தொற்று நோய் அபாயம்

  By DN  |   Published on : 01st October 2014 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாடானை, செப். 30:  திருவாடானை அருகே தொண்டி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததால்  கலக்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  திருவாடானை  பாரதி நகர் தொலைபேசி அலுவலகம் அருகே தொண்டி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து, அதில்  கழிவுநீர் கலந்து செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குடிநீரும் வீணாகுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  தொண்டியில் கடந்த பல மாதங்களாக குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் வீணாவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கழிவுநீர்கலப்பதையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai