சுடச்சுட

  

  ஜப்பானில் நடைபெறும் ஜெ.ஆர்.சி.முகாமில் பங்கேற்கும் ராமநாதபுரம் மாணவி

  By DN  |   Published on : 01st October 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜப்பானில் நடைபெறவுள்ள ஜூனியர் ரெட்கிராஸ் முகாமில் பங்கேற்று பேச ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஆர்.ஜேன்மதுரம்(படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

     தெற்காசிய நாடுகளின் சார்பில் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் ஜூனியர்கள் பங்கேற்கும் முகாம் அக்.22 ஆம் தேதி தொடங்கி நவ.5 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

  இம்முகாமில் இந்தியா சார்பில் பங்கேற்க ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் ஒன் மாணவி ஆர்.ஜேன் மதுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  புதுதில்லி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியும், தமிழ்நாடு மாநில கிளையும் ராமநாதபுரத்தை சேர்ந்த இம்மாணவியை தேர்வு செய்துள்ளனர்.

             இம்முகாமில் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்படும் விதம், உலகம் முழுவதும் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். பேரிடர் மேலாண்மை, முதலுதவி செய்தல் ஆகியன குறித்து மாணவி ஆர்.ஜேன் மதுரம் பேசுகிறார்.

   மாணவிக்கு ஆட்சியர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai