சுடச்சுட

  

  பரமக்குடி, செப். 30:  பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் 10 நாள் சிறப்பு முகாம் பெரும்பச்சேரியில் நடைபெற்று வருகிறது.

   இம்முகாமினை பள்ளித் தலைமையாசிரியர் செ.சந்தியாகு துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வி.முருகன், ஆயிரவைசிய சபை பொருளாளர் ஏ.ஆர்.சுப்பிரமணியன், ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆர்.முருகானந்தம், கல்வியியல் கல்லூரி செயலர் வி.எஸ்.என்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ்.மணிமுத்து வரவேற்றார்.

   முகாமில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் விநாயகர் கோவில் உழவாரப்பணி, பள்ளி வளாகம் துப்புரவு, தொடக்கப்பள்ளிக்கு வேலி அமைத்தல், காந்திகாலணி கோவில் துப்புரவுப்பணி, மயானச்சாலை சீரமைப்பு, மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

   கிராம மக்களிடையே சுகாதாரம் குறித்தும், தொற்று நோய்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு, பெண் கல்வியின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் களப்பணி ஒருங்கிணைப்பாளர்கள் பி.ரமேஷ், எம்.பி.தங்கராஜ், பி.முத்துக்குமார், எம்.துரைசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  பள்ளி கல்விக்குழு உறுப்பினர் ச.பூபாலன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai