சுடச்சுட

    

    ராமநாதபுரம், செப். 30:   ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மாவட்ட அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்துக்கு அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலர் ஆர்.தர்மர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன், மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலர் எஸ்.அங்குச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

     உண்ணாவிரத போராட்டத்தில் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலர்கள் கே.சி.ஆணிமுத்து, ஜி.முனியசாமி, எம்.ஏ.முனியசாமி, நகர்மன்றத் தலைவர்கள் எஸ்.சந்தானலெட்சுமி(ராமநாதபுரம்), அர்ச்சுணன்(ராமேசுவரம்), கீர்த்திகா முனியசாமி(பரமக்குடி),  ராவியத்துல் காதரியா(கீழக்கரை), முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் கவிதா, ராமநாதபுரம் ஒன்றியச் செயலர் அசோக்குமார், மாவட்ட மாணவரணி செயலர் செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சபரிதயாமதி உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து அக்கட்சியை சேர்ந்த  தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் பா.ஜெகதீசன், செயலர் குப்தா.கோவிந்தராஜன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai