சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் டிச.26-இல் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்கள் மாநாடு: சுவாமி ராமானந்தர் பேட்டி

    By DN  |   Published on : 02nd October 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநாடு திருவண்ணாமலையில் டிசம்பர் 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என இந்த மாநாட்டுக் குழுச் செயலரான சுவாமி ராமானந்தர் ராமநாதபுரத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:

     திருவண்ணாமலையில் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 22 ஆவது மாநாடு நடைபெறுகிறது.

      சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் கொடியேற்றியும், குத்துவிளக்கேற்றியும் விழாவைத் துவக்கி வைக்கிறார். மாநாட்டுக் குழுவின் தலைவர் டி.பி.என். தேவராஜன் வரவேற்கிறார்.

      முதல் நாள் விழாவில், மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தஜி மகராஜ், தேனி சித்பவானந்தா ஆசிரமத் தலைவர் சுவாமி ஓங்காரனந்தாஜி மகராஜ், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ராமசுப்பிரமணியன், தவத்திரு மருதாசல அடிகளார் மற்றும் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் உள்பட பலரும் பேசுகின்றனர்.

     டிச.27 ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ணர் பூஜை மற்றும் ஹோமங்களுடன் விழா துவங்குகிறது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் துணைத் தலைவர் செல்வி நிவேதிதா பிடே, சென்னை ஸ்ரீ சாரதா மடத்தின் நிர்வாகி ப்ரவ்ராஜிகா ராமாப்ராணா மாதாஜி, உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரம நிர்வாகி யதீஸ்வரி அனந்த பிரேமப்பிரியா அம்பா, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தஜி மகராஜ் உள்பட பலரும் பேசுகின்றனர்.

     டிச.28 ஆம் தேதி கோயம்புத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா நிர்வாகி சுவாமி தத்பிரபானந்தஜி மகராஜ், ஊட்டி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ராகவேசானந்தஜி மகராஜ், உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம நிர்வாகி யதீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா, தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்த பாவ பிரசார் பரிஷ்த் கன்வீனர் எஸ்.பாண்டுரங்கன் ஆகியோர் பேசுகின்றனர்.

      இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட துறவியர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாகவும் சுவாமி ராமானந்தர் தெரிவித்தார்.

       பேட்டியின்போது, ராமநாதபுரம் ஞானதீப சேவா சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai