சுடச்சுட

  

  திருவாடானை, அக். 1:   திருவாடானையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    திருவாடானை ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு முன்னாள் மாவட்ட செயலர் ஆணிமுத்து தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், ஒன்றியக் குழுத் தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதில் குளத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் பெரியநாயகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாகரத்தினம், அஞ்சுகோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜூ, திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர் காளை, துணைத் தலைவர் ராமரத்தினம் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai