சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் மீனவர்கள் படகில் நின்று கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, ராமேசுவரம் மீனவர்கள்  செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் மீனவர்கள் நின்று கையில் கருப்பு கொடி ஏந்தி  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

      ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர் எமரிட், ஜேசுராஜா, நம்புசேகரன் மற்றும் ராமேசுவரம் நகர் அதிமுக நிர்வாகி பி.ஜி.சேகர், நகர்மன்ற 11ஆவது வார்டு உறுப்பினர்  சரவணன் உள்பட மீனவர்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     மேலும், பாம்பன் தெற்கு பகுதி நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையிலும், பாம்பன் பாலம் வடக்குப் பகுதி நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் அருள் தலைமையிலும் மீனவர்கள் படகில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai