சுடச்சுட

  

  ராமேசுவரம் திருக்கோயிலில் அம்பு எய்தல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக்.3) மாலை கோயில் நடை சாத்தப்படுகிறது.

   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா செப்.23 ஆம் தேதி  துவங்கி நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் தொடர்ந்து நடந்துவரும் திருவிழாவில்  இறுதி நாளான (அக்.3) வெள்ளிக்கிழமை விஜயதசமியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மகர நோம்பு திடலில், அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  அதனையொட்டி, திருக்கோயிலிலிருந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் உலா வந்து, அம்பு எய்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

     இதனையொட்டி கோயில் நடைகள் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை சாத்தப்படுகின்றன. பின்னர், நிகழ்ச்சி முடிந்து சுவாமி, அம்பாள் புறப்பாடாகி கோயிலை வந்தடைந்தவுடன், நடைகள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள்  நடைபெறும் என திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai