சுடச்சுட

  

  வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டம்

  By DN  |   Published on : 02nd October 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உரிய சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள்  பாதிப்புக்குள்ளாகினர்.

   வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பணியினைச் செய்யாமலும், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறாமலும், அளிக்கப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழ்கள் வழங்காமலும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   இதுகுறித்து செயலர் எம்.முரளிதரன் கூறியது: சிறுபாசனக் கண்மாய்களில் உள்ள காட்டு கருவேல் மரங்களை வருவாய் நிலையாணைக்கு முரணாக  உள்ளாட்சித் துறையினரால் ஏலம் விடுவதற்கு நீதிமன்றத் தடையாணைக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மறைமுக ஆதரவு அளித்துள்ளது.

   மேலும், பணியாளர்களை வசிப்பிடம் உள்ள வட்டங்களிலேயே பணியமர்த்த பலமுறை வலியுறுத்தியும் அதனை கண்டுகொள்ளாத போக்கைக் கண்டித்தும், தாலுகா வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பணியிடங்களில் முதுநிலையின் அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுவரும் நடைமுறையை மாற்றி, பணியில் இளையவரை வட்டாட்சியராக நியமனம் செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai