சுடச்சுட

    

    அச்சுந்தன்வயலில் கால்நடை மருத்துவ முகாம்

    By ராமநாதபுரம்,  |   Published on : 04th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் டி.டி. விநாயகர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் அச்சுந்தன்வயல் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    முகாமுக்கு பள்ளியின் தாளாளர் பி. மோகன் தலைமை வகித்தார். பள்ளியின் கல்விக்குழுத் தலைவர் கே. ரவீந்திரன், பொருளாளர் என். ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். முருகேசன் வரவேற்றார். முகாமில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சூரன்கோட்டை கால்நடை மருத்துவர் இரா. ஜெயப்பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் இலவசமாக வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ரா. வள்ளுவன் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சி. மாரியப்பன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai