சுடச்சுட

  

  ராமநாதபுரம் அரண்மனை முன் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரூ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

  இந்த உண்ணாவிரதத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாநிலப் பிரிவு இணைச் செயலர் ரெத்தினம் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலர் பிரகாசம், மாவட்ட பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் புறநகர்ப் பிரிவு செயலர் தமிழ்ச்செல்வன், மின் வாரிய பரமக்குடி கோட்ட செயலர் மதிவாணன், பரமக்குடி கோட்டத் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்பட ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai