சுடச்சுட

  

  பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமப் பகுதியில் ஆவின் பால் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கிச் சென்ற பாலை திருடியதாக 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  போகலூர் ஒன்றியம் காமன்கோட்டை, காக்கனேந்தல் ஆகிய பகுதிகளிலிருந்து கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 100 முதல் 150 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

  இதுபோன்று கொண்டு செல்லும் பாலின் அளவு கடந்த சில மாதங்களாக 15 லிட்டர் வரை குறைவதாக அதை எடுத்துச் செல்லும் ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் காமன்கோட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்து (70) பால் கொண்டு செல்லும் வாகனத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது வேன் ஓட்டுநர் பிரபக்கலூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் முத்துக்குமார் (24), அதில் பணியாற்றும் ஊழியர்கள் இலந்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் குணாளன் (23), சந்தானம் மகன் சதீஷ் (23) ஆகிய 3 பேரும் பொட்டிதட்டி கிராமத்தில் பால் வண்டியை நிறுத்தி, பாலை திருடி அங்குள்ள கடையில் விற்பதை கையும் களவுமாக பிடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தாராம்.

  இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முத்து அளித்த புகாரின்பேரில், சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன், பாலை திருடியதாக முத்துக்குமார், குணாளன், சதீஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai