சுடச்சுட

  

  உலக முதியோர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதியோர் பேரணியை டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  பேரணிக்கு மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ். சேசுராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.ஜே.பி. பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எம். சித்ராமருது (பட்டிணம் காத்தான்) எஸ்.எம். நூர்முகம்மது (சக்கரக் கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின் செயலர் என். ராமகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார்.

  மாவட்டம் முழுவதும் இருந்து வந்த முதியோர் பலர் பங்கேற்ற பேரணி ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியை ராமநாதபுரம் டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  பேரணி நிறைவு பெற்ற பின்னர் அந்த பள்ளியில் உலக முதியோர் தின விழாவும் நடைபெற்றது. விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் ஆர். மலையரசி உள்பட பலரும் பேசினர். ரயில் நிலையத்தில் மூத்த குடிமக்களுக்கு தனி முன்பதிவு மையம் ஏற்படுத்திட வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான தனிநபர் வருமானவரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஓய்வூதியர்கள் வருமானவரி கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai