Enable Javscript for better performance
எம்.ஜி.ஆர். இளைஞரணியினர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    எம்.ஜி.ஆர். இளைஞரணியினர் உண்ணாவிரதம்

    By பரமக்குடி,  |   Published on : 04th October 2014 12:12 AM  |   அ+அ அ-   |    |  

    பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யவும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    உண்ணாவிரதத்துக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலர் எம்.ஏ. முனியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர். தர்மர், நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா, முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தில் தலைமைக் கழக பேச்சாளர் எம்.கே. ஜமால், முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பேசினர்.

    உண்ணாவிரதத்தில் அதிமுக ஒன்றிய செயலர்கள் கே. முத்தையா, ஜி. நாகநாதன், பி. குப்புச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ஜி. ரஜினிகாந்த், நகர்மன்ற உறுப்பினர் கே. அப்துல்மாலிக், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் எம். நாகராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    kattana sevai