Enable Javscript for better performance
கேபிள் டி.வி. உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கேபிள் டி.வி. உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம்

    By ராமநாதபுரம்,  |   Published on : 04th October 2014 12:22 AM  |   அ+அ அ-   |    |  

    பெங்களூரூ நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சனிக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 400 கேபிள் டி.வி. உரிமையாளர்கள் உள்ளனர். மொத்தம் ஒரு லட்சம் கேபிள் இணைப்புகள் உள்ளன. ஜெயலலிதாவுக்கு பெங்களூரூ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து மாவட்டத்தில் உள்ள கேபிள் டி.வி. உரிமையாளர்கள் அனைவரும் சனிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதால் கேபிள் டி.வி.க்கள் எதுவும் இயங்காது என அவர் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai