சுடச்சுட

    

    பரமக்குடி ரயில் நிலையத்தில் மாணவர்கள் தூய்மைப் பணி

    By பரமக்குடி,  |   Published on : 04th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பரமக்குடி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரிகளின் என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவர்களின் தூய்மைப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரமக்குடி ரயில் நிலையத்தில் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ். மாணவர்கள் காந்தி ஜயந்தி தினமான வியாழக்கிழமை காலை 8 முதல் 12 மணி வரை ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில் பாதை ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

    இப்பணியானது காரைக்குடி என்.சி.சி. பட்டாவியன் ஹவில்தார் கோர்க்கே தலைமையில் மதுரை ரயில்வே சீனியர் சிக்னல் டெலிகாம் பொறியாளர் சிவானந்தபாபு மேற்பார்வையில் நிலைய அதிகாரிகளுடன் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக மாணவ- மாணவிகள் அனைவரும் ஆண்டுக்கு 100 நாள் உடல் உழைப்பால் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் தாங்கள் வசிக்கும் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai