சுடச்சுட

  

  ராமேசுவரத்தில் காய், கனியில் உருவங்கள் வடிவமைப்பு கண்காட்சி

  By ராமேசுவரம்  |   Published on : 04th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமேசுவரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதி சார்பில் பலவகையான காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி கடல்வாழ் உயிரினங்கள், மகாத்மா காந்தி, மலர்கள் மற்றும் மீன்பிடி படகு ஆகிய உருவங்களை சிற்பங்களாக வடிவமைத்து வைக்கப்பட்ட கண்காட்சி நடைபெற்றது.

  உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலமான ராமேசுவரத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் நவராத்திரி திருவிழாவையொட்டி சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

  இதையொட்டி முதன் முதலாக சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும் ராமேசுவரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதி சார்பில் அதன் வளாகத்தில் வியாழக்கிழமை காலையில் காய், கனியில் உருவங்கள் வடிமைத்து வைக்கப்பட்ட கண்காட்சி நடைபெற்றது.

  இந்த கண்காட்சியில் பலவகையான காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி மகாத்மா காந்தியின் உருவம், கடல் வாழ் உயிரினங்களான மீன் வகைகளின் உருவங்களையும், மீன்பிடி படகு மற்றும் மலர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

  இதனை நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பள்ளி மாணவர்களும் மற்றும் உள்ளூர் பொதுமக்களும் பார்வையிட்டனர். மேலும் கண்காட்சி ஏற்பாடுகளை தங்கும் விடுதி மேலாளர் குணேஸ்வரன் ஆலோசனையில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai