சுடச்சுட

  

  இளைஞர்கள் சுயதொழில் துவங்க அக்.7 ஆலோசனை வழங்கும் முகாம்

  By ராமநாதபுரம்  |   Published on : 05th October 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக சுயதொழில் துவங்க ராமநாதபுரத்தில் இம்மாதம் 7 ஆம் தேதி ஆலோசனை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் (ய்ங்ங்க்ள்) தொழில் துவங்க குறைந்தபட்சம் ரூ.5 லட்சமும் அதிக பட்சமாக ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அதிகபட்சமாக 25 விழுக்காடு அல்லது ரூ.25லட்சம் வரை மானியமும் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் (ன்ஹ்ங்ஞ்ல்) தொழில் துவங்க அதிகபட்சம் ரூ.5லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக 15 விழுக்காடு அல்லது ரூ.75 ஆயிரம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

  பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (ல்ம்ங்ஞ்ல்) தொழில் துவங்க அதிக பட்சம் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இதற்கு அதிகபட்சம் 35 விழுக்காடு அல்லது ரூ.8.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இலவசமாக பெறவும், ஆலோசனை பெறவும் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மையத்திலும் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி உள்ள ஒளவையார் தெரு அலுவலகத்திலும் இம்மாதம் 7 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆலோசனை வழங்கும் சிறப்பு கூட்டமும் நடைபெறுகிறது.

  இம்முகாமில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் அசல் கல்விச்சான்றுடன் நேரில் வந்து ஆலோசனை பெற்று தொழில் துவங்கிட அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai