சுடச்சுட

  

  தேவகோட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் தூய மரியன்னை பெண்கள் பள்ளி இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நல வழிகாட்டுதல் முகாம் சடையன்காடு கிராமத்தில் நடைபெற்றது.

  தேவகோட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் தூய மரியன்னை பெண்கள் பள்ளி இணைந்து நடத்திய இம் முகாம் சடையன்காடு கிராமத்தில் சங்கத்தலைவர் குமாரவேல், தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஓருங்கிணைப்பாளர் ஜெஸிந்தா மேரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பயன்படுத்துவோம் துணிப்பை, ஓழிப்போம் பாலிதீன் பை, பூமித்தாய்க்கு வேண்டாம் பாலிதீன் பை போர்வை உள்ளிட்ட வாசகங்கள், முழக்கங்களுடன் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த ரங்கசாமி, கார்மேகம், ராமராஜன் ஆகியோர் பாலிதீன் ஓழிப்பு மற்றும் மாணவியரின் சேவை மனப்பான்மை குறித்து பேசினர்.

  நிகழ்ச்சியில் மாணவிகள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai