சுடச்சுட

  

  கமுதி அருகே கோயில் திருவிழா குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

  அபிராமம் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்தது செய்யாமங்கலம். இவ்வூரில் குறிப்பிட்ட சமூகத்தினர் கோயில் திருவிழா நடத்தி வருகின்றனர். இதையொட்டி குதிரை எடுப்பு பவனி உற்சவமும் நடைபெறும். செய்யாமங்கலம் கிராமத்தினர், ஏராளமானோர் அபிராமத்துக்கு வந்து, சுவாமி மற்றும் குதிரை சிலைகளை வாங்கி, வாகனங்களில் மேளதாளம் முழங்க வாண வெடி வேடிக்கையுடன் ஊருக்கு கொண்டு செல்வர்.

  அபிராமத்துக்கும், செய்யமாங்கலத்துக்கும் இடையே உள்ள மேலக்கொடுலூர் என்ற ஊர் வழியாகத் தான் குதிரை எடுப்பு உற்சவ பவனி செல்லும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பவனி சென்ற போது செய்யாமங்கலம் கிராமத்தினருக்கும், குறிப்பிட்ட மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர்.

  இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, குதிரை எடுப்பு பவனி நடைபெறும் போது இரு தரப்பினரும் குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதன் பின் ஆண்டுதோறும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி குதிரை எடுப்பு பவனி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வழக்கம் போல் குதிரை எடுப்பு உற்சவ பவனியை செய்யாமங்கலம் கிராமத்தினர் நடத்தினர்.

  இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என். மயில் வாகனன் ஆகியோர் உத்தரவில், பரமக்குடி சார் ஆட்சியர் சு. சமிரன் மேற்பார்வையில் வட்டாட்சியர்கள் நாகநாதன் (கமுதி), ராமமூர்த்தி (முதுகுளத்தூர்), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, உதவி கண்காணிப்பாளர்கள் வினோத் சாந்தாராம் (பரமக்குடி), சுந்தரவடிவேல் (மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.), ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பாலமுருகன், குமரன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் லட்சுமி, செல்லப்பாண்டியன், சந்தவழியான், கதிரேசன் ஆகியோர் அபிராமம், மேலக்கொடுமலூர், செய்யாமங்கலம் ஆகிய ஊர்களில் முகாமிட்டனர். காலை 10 மணிக்கு மேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அபிராமத்தில் இருந்து குதிரை எடுப்பு ஊர்வலம் தொடங்கி பகல் 2 மணிக்கு செய்யாமங்கலத்தை அடைந்தது.

  பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி, கிராமத்தினர் சுவாமி கும்பிட்டார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai