சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடியில் பூட்டியிருந்த மருத்துவமனையில் மர்ம நபர்கள் ரூ.50000-த்தை திருடிச் சென்றனர்.

    கீழக்கரை அருகே ஏர்வாடியில் கிளினிக் வைத்திருப்பவர் மதார்ஷா. இவர் உச்சிப்புளி மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். சம்பவத்தன்று இரவு பூட்டியிருந்த மருத்துவமனையில் உள்ள லாக்கரை உடைத்து அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.50000-த்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். மதார்ஷா கொடுத்த புகாரின் பேரில் ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடியவர்களை தேடிவருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai