சுடச்சுட

  

  தேவகோட்டையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி அருணகிரிபட்டிணம் முத்துமாரியம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்புப் பூஜை நடத்தினர்.

  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார் ஜெயலலிதா. அந்த வழக்கிலிருந்து அவர் விரைந்து விடுதலை பெற வேண்டி தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் 4ஆவது வார்டில் உள்ள அருணகிரிபட்டிணம் முத்துமாரியம்மன் கோயிலில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகரச் செயலாளர் தனசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்ரமணியன், வீரப்பன், சிலோன் பாலு, சிவக்குமார், ரமேஷ், கேபிள் பாலா, சேதுபாண்டி, சரவணன், நகர ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் காட்டுராஜா மற்றும் வட்டச் செயலாளர் ராதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai