சுடச்சுட

  

  தேவகோட்டையில் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நகர சிவன் கோயில் குளக்கரையில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  தேவகோட்டையில் உள்ள அனைத்து கோயில்களிலும் செப்.24ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. அன்று முதல் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

  இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு போடுதல் நிகழ்ச்சி நகர சிவன் கோயில் குளக்கரையில் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை அம்மச்சி ஊருணியில் உள்ள கிருஷ்ணன் கோயில்,செல்லப்பச்செட்டியார் ஊருணியில் அமைந்துள்ள கைலாசநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில், தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோயில்,நகர சிவன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், இரகுசேரி கோயில் மும்முடிநாதர் கோயில் ஆகிய பகுதிகளில் இருந்து சுவாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர சிவன் கோயிலுக்கு தத்தம் வாகனங்களில் வந்து மக்களுக்கு அருள் பாலித்தனர். நகர் சிவன் கோயில் குளக்கரையில் திரளான மக்கள் கூட்டத்திற்கு நடுவே மேளதாளங்கள் முழங்க அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பினை எடுத்து இறைவன் அருள் பெற்றுச்சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai