சுடச்சுட

  

  ராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்கம், டி.டி. விநாயகர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து ரயில் நிலையத்தில் உழவாரப் பணியினை மேற்கொண்டனர். இப்பணிக்கு ராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் பா. ஜெகதீசன் தலைமை வகித்தார். ரயில் நிலைய கண்காணிப்பாளர்கள் வி. நிறைமதி, எஸ். செல்வராஜ், டி.டி. விநாயகர் பள்ளியின் கல்விக் குழு பொருளாளர் என். ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர் ஆர். சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவாரப் பணியினை தெற்கு ரயில்வே மூத்த கோட்டப் பொறியாளர் பி. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்கச் செயலர் குப்தா. கோவிந்தராஜன், ஆயிர வைசிய காசுக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.என். மனோகரன், டி.டி.வி. பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஆர். வள்ளுவன், நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் ஏ. செய்யது ஒலி ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டு உழவாரப் பணியினை செய்தனர்.

  நிறைவாக டி.டி.வி. பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சி. மாரியப்பன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai