சுடச்சுட

    

    ராமேசுவரம் கோயிலில்அதிமுகவினர் சிறப்பு பூஜை

    By ராமேசுவரம்,  |   Published on : 05th October 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகக்கோரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் மற்றும் சுவாமி, அம்பாள் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள்,அபிஷேகங்கள் தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.

    தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பெங்களூர் சிறையில் காவலில் இருந்து வருகிறார்.

    இவர் விரைவில் விடுதலையாகக்கோரி ராமேசுவரம் கோயிலில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில்,

    கோயில் வளாகத்தில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சன்னதியில் ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையில் கலசத்தில் புனித தீர்த்த நீர் நிரப்பி பூஜையில் வைக்கப்பட்டு கோயில் மூத்த குருக்கள் உதயகுமார்,கணபதிராமன், தலைமையில் மந்திரங்கள் வாசிக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து பால், தயிர், பன்னீர் ஆகிய 11 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பிறகு ஆஞ்சநேயருக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    சிறப்பு பூஜையில் தொழிற் சங்கத் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ராதா, பொ ருளாளர் நம்பு வைத்தியா மற்றும் நிர்வாகிகள் குமரேசன், கலைச்செல்வம்,துரை அனுமந்தராமு உள்பட சங்க உறுப்பினர்களும், பக்தர்களும் கலந்துகொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai