Enable Javscript for better performance
இளம்பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண் தற்கொலை

    By திருவாடானை,  |   Published on : 06th October 2014 12:42 AM  |   அ+அ அ-   |    |  

    திருவாடானை அருகே சேமன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சிந்து(22). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மோகனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    மனமுடைந்த நிலையில் இருந்த சிந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து திருவாடானை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணம் நடந்து 3 ஆண்டுகளே ஆவதால் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    kattana sevai