Enable Javscript for better performance
ஓரியூரில் திருயாத்திரைப் பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஓரியூரில் திருயாத்திரைப் பெருவிழா

    By திருவாடானை  |   Published on : 06th October 2014 12:44 AM  |   அ+அ அ-   |    |  

    திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் திருயாத்திரைப் பெருவிழா நடைபெற்றது.

    திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை திருயாத்திரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஞாயிற்றுக்கிழமை திருயாத்திரை நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களிள் இருந்து ஏராளமான பங்குத் தந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியும், சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடத்தினர். இதில் தொண்டி, திருவாடானை, வெள்ளையாபுரம், ஆர்.எஸ்.மங்கலம், பாண்டுகுடி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai