சுடச்சுட

    

    கமுதி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயிலில் சனி உற்சவம்

    By கமுதி,  |   Published on : 06th October 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில், புரட்டாசி 3ஆவது வார சனி உற்சவம் நடைபெற்றது.

    உற்சவத்துக்கு கோயில் நிர்வாக டிரஸ்டி ஆர்.முனியாண்டி செட்டியார் தலைமையும், டிரஸ்டிகள் பி.ஜி.மார்க்கண்டேயன் செட்டியார், பி.ராமையா, ஆர்.செல்வராஜ், ஏ.தவபிச்சை ஆசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டகப்படி உபயதார்கள் என்.ஆர்.எம்.எஸ். குடும்பத்தினர், ராமையா குடும்பத்தினர் சார்பில் சுவாமி-அம்பாள்களுக்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார தீப ஆராதனை பூஜை நடத்தப்பட்டது.

    உற்சவத்தில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கே. ரவி உள்பட பலரும் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai