சுடச்சுட

    

    ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி சர்வமத பிரார்த்தனை

    By பரமக்குடி,  |   Published on : 06th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி முத்தாலம்மன் கோயில் மேடையில் மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவு சார்பில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் கே.அப்துல்மாலிக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.தர்மர், நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா, முன்னாள் மாவட்டச் செயலர்கள் எம்.ஏ.முனியசாமி, கே.சி.ஆணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்து சமயம் சார்பில் அக்னிஹோமம், கிறிஸ்தவ மதம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெப வழிபாடு, இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் ஆ.அன்வர்ராஜா பேசும்போது, அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பைத் தகர்த்தெறிந்து மீண்டும் முதல்வராவார். இதற்காக மக்கள் அனைவரும் கோயில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai