சுடச்சுட

    

    ஜெயலலிதா விடுதலையாக வேண்டி 108 பால்குடம் எடுத்து வழிபாடு

    By ராமநாதபுரம்  |   Published on : 06th October 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மகளிர் அணியின் சார்பில் ஜெயலலிதா விடுதலையாக வலியுறுத்தி 108 பால்குடங்கள் எடுத்து வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.

    ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணியின் சார்பில் அதன் செயலர் கவிதா சசிக்குமார் தலைமையில் ஜெயலலிதா விடுதலையாக வலியுறுத்தி 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் சிவன் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா, கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    அவைத்தலைவர் செ.முருகேசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.சி.வரதன், நிலவள வங்கித் தலைவர் அசோக்குமார், நகர் செயலர் அங்குச்சாமி, முன்னாள் மாவட்டச் செயலர் ஜி.முனியசாமி, முன்னாள் இளைஞர் பாசறையின் செயலர் ஸ்டாலின், ராம்கோ துணைத் தலைவர் தஞ்சி.சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் எஸ்.எம்.அக்ரஹாரம், சிகில்ராஜ வீதி, வண்டிக்காரத் தெரு வழியாக அருள்மிகு வழிவிடு முருகன் கோயிலை வந்ததடைந்த பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai