சுடச்சுட

  

  ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி தேவர் நினைவிடத்தில் சிறப்பு யாகம்

  By கமுதி,  |   Published on : 06th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை வேண்டி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட வளாகத்தில் சிறப்பு யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு ஏ.அன்வர்ராஜா எம்.பி. தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.தர்மர், மாவட்ட ஊராட்சிகள் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், முன்னாள் எம்.பி, என்.நிறைகுளத்தான், ஒன்றிய அவைத் தலைவர் க.சிங்கம் என்ற முத்துராமலிங்கம், செயலர் ஏ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை செயலர் தி.ராமகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் த.பாலு(கமுதி), வி.மூக்கையா(கடலாடி), நவநாதன்(போகலூர்), பரமக்குடி ஒன்றியச் செயலர் முத்தையா, மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள் எஸ்.முத்துராமலிங்கம், கரிசல்புளி முனியசாமி, முன்னாள் ஒன்றியச் செயலர் கே.முருகேசன், ஒன்றிய இளம்பெண்கள், இளைஞர் பாசறை செயலர் வி.கே.ஜி.முத்துராமலிங்கம், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். யாகசாலை பூஜையை அடுத்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai