சுடச்சுட

    

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை வேண்டி தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம், ஞாயிற்றுக்கிழமை ந டைபெற்றது. இதையொட்டி கமுதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டது.

    கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி வழியாக தினசரி மதுரை, ராமநாதபுரம், அருப்புக்கோட்டை, முதுகுளத்தூர், பெருநாழி, தூத்துக்குடி, கீழக்கரை, கடலாடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை திடீரென்று அறிவித்து வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனால் வெளியூர்களுக்கு தனியார் பேருந்துகள் செல்லாததால் எதிர்பாராத பயணத்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். கமுதி பகுதி சார்பில் தனியார் பேருந்து உரிமையாளர் வி.கே.எம். முருகன் தலைமையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai