சுடச்சுட

  

  கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக ஒரு வார கால சிறப்பு முகாம் கண்ணன்பொதுவன் கிராமத்தில் நடைபெற்றது.

  தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் சையது ஒலி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

  திட்ட அலுவலர் சொக்கர் ஒருங்கிணைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கடலாடி அரசு மருத்துவமனை, மங்கள விநாயகர் கோயில் போன்றவற்றைச் சுத்தம் செய்தனர். மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் கால்நடை மருத்துவமுகாம், தீயணைப்பு மீட்பு பணி செய்வது குறித்து நிலைய அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். பசுமை பாரதம் இயக்கத் தலைவர் தீனதயாளன், உதவித் தலைமை ஆசிரியர் ராஜாராம், கவுன்சிலர் கண்ணதாசன், ஆசிரியர் ராமபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai