சுடச்சுட

    

    பார்த்திபனூர், நயினார்கோவிலில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

    By பரமக்குடி,  |   Published on : 06th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பார்த்திபனூர் மற்றும் நயினார்கோவில் பகுதியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பரமக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் பார்த்திபனூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஒன்றிய செயலர் கே.முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஏ.பாதுஷா, முன்னாள் மாவட்டச் செயலர் சோமாத்தூர் சுப்பிரமணியன், தொகுதி கழகச் செயலர் ஆ.பாலுச்சாமி, எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலர் எம்.நாச்சியப்பன் வரவேற்றார்.

    மாவட்டச் செயலர் ஆர்.தர்மர், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச்செயலர் வெங்கடேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் சரயு ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    நயினார்கோவிலில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ப.குப்புச்சாமி தலைமை வகித்தார். அரசு வழக்குரைஞர் நவநாதன், மாவட்ட கவுன்சிலர் ஜி.ரஜினிகாந்த், அவைத்தலைவர் வரவணி சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலர் கருப்பையா வரவேற்றார். மாவட்டச் செயலர் ஆர்.தர்மர், ஒன்றியக் கவுன்சிலர் கோவிந்தன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன், தைராஜ், முன்னாள் அவைத்தலைவர் காட்டுராஜா உள்ளிட்டோர் பேசினர்.

    உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    கடலாடியில் உண்ணாவிரதம்: கடலாடி தேவர் சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாவட்டச் செயலர் ஆர்.தர்மர் தலைமை வகித்தார். அன்வர்ராஜா எம்.பி., ஒன்றியக்குழு தலைவர் எம்.சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றியச் செயலர் என்.கே.முனியசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயல்குடி ஒன்றியச் செயலர் ஏ.எஸ்.பி.அந்தோணிராஜ், ஊராட்சிக் குழுத் தலைவர் வீ.மூக்கையா, தொகுதி கழகச் செயலர் எஸ்.பி.காளிமுத்து, கமுதி ஒன்றியச் செயலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், கவுன்சிலர்கள் குமரையா, எம்.முத்துமாரி, இளைஞரணிச் செயலர் எம்.சத்தியமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர் முகம்மது ரபீக், இளைஞரணி சுந்தரமூர்த்தி, சிவக்குமார், கே.அர்ச்சுணன், அண்ணா தொழிற்சங்கம் ரவிச்சந்திரன், மீனவரணி முருகேசன், விவசாய அணி கருப்புசாமி, ஊராட்சித் தலைவர் முருகானந்தம் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மேலக்கிடாரம்: கடலாடி தாலுகா மேலக்கிடாரம் ஊராட்சி பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் கே.ராஜாங்கம் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கத் தலைவர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai